கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் அணி வெற்றிபெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் + "||" + Chepauk Super Gillies Needs 104 Runs to beat Dindigul Dragons

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் அணி வெற்றிபெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் அணி வெற்றிபெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும். 

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக விமல் குமார் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் களமிறங்கினர்.

விமல்குமார் 17 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மணி பாரதி ரன் எதுவும் எடுக்காமல் (0) வெளியேறினார். 

திண்டுக்கல் அணியின் தொடக்க வீரரும் அந்த அணியின் கேப்டனுமான ஹரிநிஷாந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 56 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், அந்த அணியின் எஞ்சிய வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் சாய் கிஷார் 4 ஓவர்களுக்கு 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 24-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதின.
3. டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.
4. டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.