ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் துபாய் சென்றனர்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் துபாய் சென்றனர்
x
தினத்தந்தி 14 Aug 2021 12:52 AM GMT (Updated: 2021-08-14T06:22:02+05:30)

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, அந்த அணியில் அங்கம் வகிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கரண் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப் உள்ளிட்டோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர். தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் மும்பையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டனர்.

Next Story