கிரிக்கெட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் புதிய சாதனை + "||" + England’s pacer James Anderson sets new record

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் புதிய சாதனை

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் புதிய சாதனை
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த இன்னிங்சில் 29 ஓவர்களில் 7 மெய்டனுடன் 62 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது இது 31-வது நிகழ்வாகும். லண்டன் லார்ட்சில் மட்டும் இத்தகைய சாதனையை 7 முறை செய்திருக்கிறார். ஆண்டர்சனின் தற்போதைய வயது 39 ஆண்டு 14 நாட்கள். இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றார்.