கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி + "||" + West Indies beat Pakistan in Test cricket

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி.
கிங்ஸ்டன்,

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 217 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களும் எடுத்தன. 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 203 ரன்னில் சுருண்டது. இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீலஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.


இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 168 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்த போதிலும் மிடில் வரிசையில் ஜெர்மைன் பிளாக்வுட் அரைசதம் அடித்து (55 ரன், 78 பந்து, 10 பவுண்டரி) நம்பிக்கை தந்தார். ஆனால் அவர் வெளியேறியதும் கடைசி கட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் மதில் மேல் பூனையானது. 9-வது விக்கெட்டை பறிகொடுத்த போது அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்த போதிலும் கெமார் ரோச் (30 ரன்), ஜெய்டன் சீலஸ் (2 ரன்) ஜோடியினர் போராடி இலக்கை எட்ட வைத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 56.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. பிளாக்வுட் 26 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆன போது அதை அப்பீல் செய்ய தவறியதும், கெமார் ரோச்சுக்கு 16 ரன்னில் கேட்ச்சை கோட்டை விட்டதும் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 15-வது நிகழ்வாகும். இதில் வெஸ்ட் இண்டீஸ் மட்டும் இத்தகைய வெற்றியை 3 முறை கண்டிருக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார்
ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி: கர்நாடக மக்களுக்கு ஜே.பி.நட்டா நன்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.
3. இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
4. ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி: இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.