கிரிக்கெட்

இந்திய அணிக்கு தெண்டுல்கர், வார்னே பாராட்டு + "||" + Tendulkar, Warne praise India

இந்திய அணிக்கு தெண்டுல்கர், வார்னே பாராட்டு

இந்திய அணிக்கு தெண்டுல்கர், வார்னே பாராட்டு
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமான வெற்றியை ருசித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
மும்பை,

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமான வெற்றியை ருசித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த டெஸ்டில் ஒவ்வொரு தருணத்தையும் பார்த்து ரசித்தேன். கடினமான கட்டத்தில் இருந்து இந்தியா மீண்டு எழுந்ததும், மனஉறுதியும் என்னை பொறுத்தவரை தனித்து நிற்கிறது. மிக நன்றாக விளையாடியுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ‘லார்ட்சில் என்ன ஒரு அருமையான டெஸ்ட். சிறந்த ஆடுகளம், சிறந்த கிரிக்கெட் மற்றும் இந்தியாவின் அபாரமான திறமையின் வெளிப்பாடு. இங்கு நினைவூட்டுகிறேன், இந்தியா டாஸ் இழந்தது, முதல் இன்னிங்சில் இங்கிலாந்துக்கு முன்னிலை கொடுத்தது. அத்துடன் கடைசி நாளில் ரிஷாப் பண்ட் அவுட் ஆனதும் இங்கிலாந்துக்கு தான் வெற்றி என்று ஒவ்வொருவரும் நினைத்தனர். ஆனால் போராடி எழுச்சி பெற்ற இந்தியா வெற்றிக்கு தகுதியான அணி’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. “சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி பணியை கால் முறிந்தபோதும் தொடர்ந்த பெண் பணியாளர்; பிரதமர் மோடி பாராட்டு
இமாசல பிரதேசத்தில் கால் முறிந்தபோதும் கொரோனா தடுப்பூசி பணியை தொடர்ந்த பெண் பணியாளரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
3. விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு
விவேகானந்தர் மண்டபத்திற்கு நடைபாலம் அறிவிப்பு: தமிழக அரசுக்கு குமரி அனந்தன் பாராட்டு.
4. வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலினுக்கு குமரிஅனந்தன் பாராட்டு
வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலினுக்கு குமரிஅனந்தன் பாராட்டு.
5. வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியீடு: தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியீடு: தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு.