கிரிக்கெட்

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு + "||" + Aussie Women’s Squad Announced for Series Against India

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் (பகல்-இரவு), மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் செப்டம்பர் 19-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 22-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் 24-ந் தேதியும் நடக்கிறது. டெஸ்ட் போட்டி பெர்த்தில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரையும், 20 ஓவர் போட்டிகள் சிட்னியில் முறையே அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சு வீராங்கனை மெகன் ஸ்சட், பெலின்டா தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவும், ஆல்-ரவுண்டர் ஜெஸ் ஜானசன் காயத்தாலும் அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஜார்ஜியா ரெட்மைன், 19 வயது வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஸ்டெல்லா கேம்ப்பெல் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
மெக் லானிங் (கேப்டன்), ராய்சல் ஹேனஸ், டார்சி பிரவுன், மேட்லன் பிரவுன், ஸ்டெல்லா கேம்ப்பெல், நிகோலா கேரி, ஹேனா டார்லிங்டன், ஆஷ்லி கார்ட்னெர், அலிசா ஹீலி, டாலியா மெக்ராத், சோபி மாலினெக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா ரெட்மைன், மோலி ஸ்ரானோ, அனபெல் சதர்லேன்ட், டைலா விளாமிங், ஜார்ஜியா வேர்ஹேம்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கம்மின்சுக்கு ஓய்வு..!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வார்னர், கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கைக்கு எதிரான தொடர்: இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் ஜடேஜா, சஞ்சு சாம்சன்..!!
டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து ரஹானே, புஜாரா நீக்கப்பட்டனர்.
3. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.