கிரிக்கெட்

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு + "||" + New Zealand tour of Pakistan subject to security clearance after Taliban takeover of Afghanistan

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் நியூசிலாந்து வீரர்களில் சிலர் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமை மற்றும் கொரோனா பரவல் குறித்து ஆராய பாதுகாப்பு ஆலோசகர் ரெக் டிக்காசன் வார இறுதியில்அங்கு செல்ல இருக்கிறார். பாதுகாப்பு விஷயத்தில் அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இந்த தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சம் இருப்பதாக வீரர்கள் உணர்ந்தால் தாராளமாக விலகிக்கொள்ளலாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் எல்லையில் 2 பயங்கரவாதிகளை சுட்டுகொன்றது பாகிஸ்தான்
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள பழங்குடியின பகுதியில் தெஹ்ரீக் இ தலீபான் இயக்க பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்றது.
2. பாகிஸ்தானில் பட்டப்பகலில் 2 சீக்கியர்கள் சுட்டுக் கொலை; பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!
பெஷாவரில் சீக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. மாடலிங்கை தேர்ந்தெடுத்ததற்காக சகோதரியை சுட்டுக்கொன்ற சகோதரன்..!
நடனம் மற்றும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டதற்காக 21 வயது சகோதரியை, சகோதரன் சுட்டுக்கொன்றுள்ளார்.
4. அரியானாவில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 4 பேர் கைது
அரியானாவில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
5. ரம்ஜான் பண்டிகை: எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.