கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாற்றம் - புதிய வீரர்கள் தேர்வு + "||" + IPL Cricket Bangalore coach changed New players selected

ஐ.பி.எல். கிரிக்கெட்; பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாற்றம் - புதிய வீரர்கள் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்; பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாற்றம் - புதிய வீரர்கள் தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மீதமுள்ள ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் பெங்களூரு அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மும்பை,

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துணைத் தலைவர் ராஜேஷ் மேனன் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் விவரித்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கேடிச் விலகியுள்ளார் என்றும் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குநர் மைக் ஹெசன் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பைக் கூடுதலாக வகிக்கவுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

பெங்களூரு அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்குப் பதில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேனியல் சாம்ஸுக்குப் பதில் மற்றொரு இலங்கை பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார். ஃபின் ஆலெனுக்குப் பதில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்
கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு
இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.