பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ரமிஸ் ராஜா?


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் ரமிஸ் ராஜா?
x
தினத்தந்தி 22 Aug 2021 7:04 AM GMT (Updated: 2021-08-22T12:34:36+05:30)

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இசான் மணி உள்ளார். அவரது பதவி காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. அவரது பதவி காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். அடுத்த சில நாட்களில் தலைவர் பதவிக்கு இரு பெயர்களை கிரிக்கெட் வாரிய புரவலரான இம்ரான் கான் அனுப்பி வைப்பார். இதில் இருந்து ஒருவரை நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான 59 வயதான ரமிஸ் ராஜா அடுத்த தலைவராகுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வீரர் கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்றும், எனவே அவரது பெயரை இம்ரான்கான் முன்மொழிந்திருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story