கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விலகல் + "||" + IPL 2021: As expected, Rajasthan Royals confirm Jos Buttler won’t return for IPL Phase 2, Glenn Phillips to replace him

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் (இருவரும் இங்கிலாந்து) ஆகியோர் விலகிய நிலையில் இப்போது மேலும் ஒரு அடியாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரும் (இங்கிலாந்து) எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக 30 வயதான பட்லர் தெரிவித்தார். பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்சை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 24 வயதான கிளென் பிலிப்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 46 பந்துகளில் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) சதம் விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல்.கிரிக்கெட்: ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை பந்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: அதிரடி காட்டிய ருதுராஜ் - மும்பை அணிக்கு 157 ரன்கள் இலக்கு
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.