பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக்-க்கு கொரோனா பாதிப்பு


பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக்-க்கு கொரோனா பாதிப்பு
x

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


* அமெரிக்க மூத்த வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் நியூயார்க் நகரில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் அக்டோபர் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்குரிய இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிகுமார் தஹியா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். போதிய பயிற்சி இல்லாமல் அணி தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

* சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி பின்லாந்து நாட்டில் செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணை குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய அணி கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தாய்லாந்து, பின்லாந்து ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கிறது.

*ஈரானில் நடந்து வரும் 17-வது உலக இளையோர் (19 வயதுக்குட்பட்டோர்) கைப்பந்து போட்டியில் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் 22-25, 15-25, 22-25 என்ற நேர் செட் கணக்கில் ஈரானிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்று போலந்தை சந்திக்கிறது.

* வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியினர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று தாயகத்துக்கு புறப்பட்டனர். முன்னதாக பாகிஸ்தான் அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மட்டும் அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Next Story