‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம்


‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 25 Aug 2021 9:53 PM GMT (Updated: 2021-08-26T03:23:07+05:30)

நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்த இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை ஆகியோர் அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் எஞ்சிய 14-வது ஐ.பி.எல். போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். 

இந்த நிலையில் அந்த அணிக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 31 வயதான ஷம்சி சர்வதேச 20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளார். 39 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஷம்சி ஏற்கனவே 2016-ம் ஆண்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story