கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை + "||" + 3rd Test against India England lead by 345 runs at the end of Day 2

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
லீட்ஸ்,

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது.  2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் ஹெட்டிங்க்லேயின் லீட்ஸ் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.  இறுதியில் இந்திய அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. நேற்று முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் இருந்தது. பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மீண்டும் சிறப்பாக ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்களில் ரோரி பர்ன்ஸ் 61 (153) ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹசீப் ஹமீத், ஜடேஜா பந்து வீச்சில் போல்ட் ஆனார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 68 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து டேவிட் மலான் 70 (128) ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் 121 (165) ரன்கள் சேர்த்து பும்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 7 ரன்களிலும் ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 8 ரன்களிலும், சாம் கர்ரன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் சேர்த்துள்ளது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி தற்போது 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கிரெய்ஜ் ஓவர்டன் மற்றும் ஒலீ ராபின்சன் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் பும்ரா 1 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் சேவையை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
2. இந்தியாவில் அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - புள்ளி விவரங்களில் தகவல்
இந்தியாவில் ஆண்கள் அதிக அளவில் அசைவ உணவுகளை விரும்பி உண்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
3. இந்தியா ஏற்றுமதிக்கு விதித்த தடை எதிரொலி: உலக அளவில் உச்சம் தொட்டது கோதுமை விலை
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது.
4. இந்தியா-ஜாம்பியா இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ரத்து
அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
5. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வருவோருக்கு சிறப்பு தளம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
இந்தியாவை உலகளாவிய மருத்துவ மதிப்பு மையமாக மாற்ற உறுதி பூண்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.