கிரிக்கெட்

முகமது சிராஜை நோக்கி பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள் + "||" + England fans throw the ball towards Mohammad Siraj

முகமது சிராஜை நோக்கி பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள்

முகமது சிராஜை நோக்கி பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள்
முகமது சிராஜை நோக்கி இங்கிலாந்து ரசிகர்கள் பந்தை எறிந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜியை சீண்டியது தெரியவந்துள்ளது. எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அவரை நோக்கி, ரசிகர்கள் பந்தை எறிந்துள்ளனர். இதனால் கேப்டன் கோலி மிகவும் கோபமடைந்தார். 

இந்த தகவலை முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் தெரிவித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், ‘நாங்கள் கத்துவோம், எதையாவது சொல்லி கூச்சலிடுவோம். அது எங்களது விருப்பம் என்று நீங்கள் (ரசிகர்கள்) சொல்லலாம். ஆனால் களத்திற்குள் எதையும் தூக்கி வீசக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல’ என்றார். 

முன்னதாக 2-வது டெஸ்டின் போது இந்திய வீரர் லோகேஷ் ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்களில் சிலர் பாட்டில் மூடிகளை வீசியது நினைவிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. “முகமது சிராஜ் திறமையான பந்துவீச்சாளர்” - கேப்டன் விராட் கோலி நம்பிக்கை
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.