கிரிக்கெட்

3-வது டெஸ்ட்; தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறியது என்ன? + "||" + England vs India: Virat Kohli Says "Scoreboard Pressure" Led To Batting Collapse In 2nd Innings

3-வது டெஸ்ட்; தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறியது என்ன?

3-வது டெஸ்ட்; தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறியது என்ன?
உண்மையில் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு தகுதியானதே என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
லீட்ஸ், 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும்  76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது; - “ 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது தவறில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகத் தென்பட்டது. நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. அணிகள் எப்படி விளையாடியதோ அப்படித்தான் இந்த ஆட்டத்தின் முடிவு வந்துள்ளது. இங்கிலாந்து அணி மீண்டு வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுத்தால் தான் கீழ் நடு வரிசை வீரர்கள் மேலும் ரன்கள் எடுக்க முடியும். பேட்டிங் அணியாக நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. உண்மையில்  இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு தகுதியானதே. 

முதல் இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்டிங் குழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆஅடுத்த டெஸ்டில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வோம். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். ஓவல் டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து உள்ளோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. 45 பந்துகளில் அரைசதம் கேப்டன் விராட் கோலி;இந்தியா 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர் 12’ சுற்றில் விராட் கோலி அரைசதத்தைக் கடந்து விளையாடி வருகிறார்.
2. இந்தியா-பாகிஸ்தான் டி-20 ஆட்டம்; 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
3. “சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நினைவில் இருக்கட்டும்” இந்திய ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. இந்தியா உடன் மோதல் போக்கு; எல்லைப் பகுதிகளுக்கு புதிய சட்டத்தை நிறைவேற்றிய சீனா
இந்தியாவுடனான ராணுவ மோதல்களுக்கிடையே சீனா,‘எல்லை நிலப்பகுதிக்கான புதிய சட்டம்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் பாய்ச்சல்
20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மோதுவது தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.