கிரிக்கெட்

ரவீந்தர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம்- 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? + "||" + India vs England: Ravindra Jadeja Taken To Hospital For Precautionary Scan For Suspected Knee Injury

ரவீந்தர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம்- 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

ரவீந்தர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம்-  4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் மற்றும் 1 இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்தது. 

இந்தப் போட்டியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்தபோது ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தன்மையை அறிய அணி நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

மருத்துவமனையில் ஜடேஜாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்கேன் பரிசோதனையில் பெரியளவில் பாதிப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் அடுத்தப் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்திய அணி நாளை ஹெட்டிங்ளேயில் இருந்து கிளம்புகிறது. இந்திய அணியுடன் ஜடேஜாவும் லண்டன் புறப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜடேஜா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடிய அஷ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவு கூரத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது.
2. நிரவ் மோடி விவகாரம்: இந்தியா-இங்கிலாந்து ஆலோசனை
நாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிரவ் மோடி விவகாரத்தில், இந்தியா-இங்கிலாந்து நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
3. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
4. இலங்கை வந்துள்ள இந்திய அணி வலுவானது: ரணதுங்கா விமர்சனத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம்
தற்போது இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணி, அவர்களின் சிறந்த அணி கிடையாது. இது 2-ம் தர இந்திய அணியாகும் என ரணதுங்கா விமர்சித்து இருந்தார்.
5. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.