கிரிக்கெட்

‘அஸ்வினை சமாளிக்க தயாராக உள்ளோம்’- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் + "||" + Root: We know what Ashwin can do in the Test arena

‘அஸ்வினை சமாளிக்க தயாராக உள்ளோம்’- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

‘அஸ்வினை சமாளிக்க தயாராக உள்ளோம்’- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
அஸ்வினை சமாளிக்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
லண்டன், 

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இந்த தொடரில் அவரைபெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்த வகையில் எல்லாம் பெருமையும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும். இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அடுத்து வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சீக்கிரம் வீழ்த்த வேண்டும். அப்போது தான் தொடரை வெல்ல முடியும்.

அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அஸ்வின் உலக தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். அஸ்வினால் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும், ஆனால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். போட்டியின் போது யார் பந்துவீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை, அதை சரியாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று ரூட் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு..
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதாலேயே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
2. “வீட்டில் பலரும் கொரோனாவில் சிக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்” - அஸ்வின் உருக்கம்
குடும்பத்தினரை கொரோனா பாதித்ததால் 9 நாட்கள் தூக்கமின்றி தவித்ததாக, ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியது குறித்து அஸ்வின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
3. நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு
2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.