கிரிக்கெட்

தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Who is going to take the lead in the series? The 4th Test between India and England starts today

தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது.
லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்துகட்டுவார்கள் என்று நம்பலாம்.

கோலி-ரஹானே

2-வது டெஸ்டில் வியப்பூட்டும் வெற்றியை ருசித்த இந்திய அணி 3-வது டெஸ்டில் ஒரேயடியாக தள்ளாடியது. இதன் முதலாவது இன்னிங்சில் வெறும் 78 ரன்னில் சுருண்டு போனது. மிடில் வரிசையில் நிலையற்ற பேட்டிங் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி 5 இன்னிங்சில் ஆடி வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆப்-ஸ்டம்புக்கு சற்று விலகி செல்லும் வகையில் பந்து வீசும் போது அதை அடிக்க முயற்சித்து ஸ்லிப் அல்லது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகிவிடுகிறார். 5 இன்னிங்சிலும் அவர் இந்த மாதிரியே விக்கெட்டை இழந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு இதே போல் தூண்டில் போட இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே கோலி மிகவும் சுதாரித்து விளையாடுவதுடன், ‘கவர்டிரைவ்’ ஷாட்டுகளை அடிப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.

இதே போல் துணை கேப்டன் ரஹானே (95 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட (87 ரன்) ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியம். அப்போது தான் மறுபடியும் எழுச்சி பெற முடியும்.

அஸ்வின் வருகை?

பந்து வீச்சில் நிச்சயம் மாற்றம் இருக்கும். முதல் 3 டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட பிரதான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இதே போல் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா களம் காண வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று அளித்த பேட்டியில், ‘ஓவல் மைதான வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அது சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடியது என்பது தெரிய வரும். அஸ்வினின் சுழலின் தாக்கம் இங்கிலாந்து வீரர்களை கவலைஅடையச் செய்யும் என்பதை அறிவோம். ஆனாலும் நாளை (இன்று) காலை ஆடுகளத்தை பார்த்த பிறகே அஸ்வினை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஓவர்களை வீசி வருகிறார்கள். அவர்களின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசித் கிருஷ்ணாவை அணியில் இணைத்துள்ளோம்’ என்றார்.

மிரட்டும் ஜோ ரூட்

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் தான் முதுகெலும்பாக இருக்கிறார். 3 டெஸ்டிலும் சதம் விளாசி பிரமிக்க வைத்துள்ள அவர் மொத்தம் 507 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்த டெஸ்டில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக மொயீன் அலி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார். மார்க் வுட், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் திரும்பியிருப்பதால் அந்த அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இங்கு நடந்த கடைசி 3 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்துக்கு உள்ளூர் சூழல் சாதகமாக இருக்கும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த வெற்றி 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் கிடைத்தது. தற்போதைய இந்திய அணியில் லோகேஷ் ராகுலும், ரிஷாப் பண்டும் இங்கு சதம் அடித்துள்ளனர்.

அணி பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அல்லது பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஆலி போப், மொயீன் அலி , கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டான், ஆலி ராபின்சன், ஆண்டர்சன்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. உ.பி. தேர்தல்: பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை; 2வது இடத்தில் சமாஜ்வாதி
உத்தர பிரதேச தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் தங்களுடைய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: டென்மார்க்கிற்கு எதிராக 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
3. இணைய தொடரில் நடிக்கும் பிரசன்னா
பல படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ள பிரசன்னா தற்போது இணைய தொடரில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
4. கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி; பல இடங்களில் முன்னிலை
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 7ல் வெற்றியும், 108ல் முன்னிலையும் பெற்றுள்ளது.