கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு + "||" + Rahul, Rohit see off tricky final hour

ஓவல் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு

ஓவல் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு
2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது.
லண்டன், 

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 

2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 8,309 பேருக்கு தொற்று
இந்தியாவில் மேலும் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
2. நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவை
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
3. கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை
4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
4. கான்பூர் டெஸ்ட்; 2- வது இன்னிங்சில் இந்தியா திணறல்
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது.
5. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.