கிரிக்கெட்

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது + "||" + Pitch invader 'Jarvo' arrested after colliding with Jonny Bairstow on field

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஜார்வோ கைது
ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்  தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கனவே லார்ட்ஸ், லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். இதில் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியை பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதி விட்டார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரை பிடித்து சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த ரசிகரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்ப்பு
20 ஓவர் உலக கோப்பை இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
3. தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிராவோ!
பிராவோ தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
4. அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்
அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூரினார்.
5. பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.