2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா


2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
x

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இலங்கைக்கு எதிராக முதலில்  ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள மைதானத்தில்  நேற்று நடைபெற்றது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதன்படி 47 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்க அணி 283 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, 284- ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய இலங்கை அணி 36.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Next Story