கிரிக்கெட்

பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை + "||" + Solid Hameed, Burns set up tantalising final day

பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை

பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை
இந்தியா 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. 

99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மாவின் சதம் (127 ரன்கள்) , ரிஷப் பண்ட்  அரைசதம் (50 ரன்கள்), ஷர்துல் தாகூர் அரைசதம்  (60 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா 2-வது இன்னிங்சில்  466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,  இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக  368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

இதன்படி, 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர். 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில்  வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது.  நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு
இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு கீழ் குறைந்தது...!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: மும்பைக்கு வந்தடைந்த வீரர்கள்
இந்தியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
4. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் : 2ம் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்
வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
5. "அடுத்த போட்டியில் விளையாடுவேனா நிர்வாகம் தான் முடிவு செய்யும்"-ரஹானே பேட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்று முடிவு செய்வது நிர்வாகம் தான் என இந்திய அணியின் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.