கிரிக்கெட்

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு + "||" + This is among top-3 bowling performances of India I have seen as captain: Virat Kohli

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.  இதில், இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது இது 2-வது நிகழ்வாகும். 

இதற்கு முன்பு 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கு 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

ஒவல் மைதானத்தில் இந்தியா 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியதாவது; - கேப்டனாக நான் பார்த்த  டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும். ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார்.  ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என்றார். 

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், பும்ராவின் பந்து வீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்று கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி
ஒரு வீரராராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் .
2. “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” - விராட் கோலி திடீர் அறிவிப்பு
இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் கோலி, அஸ்வின் துபாய் சென்றனர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் சென்றனர்.
4. பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்; இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை
இந்தியா 2-வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
5. ஓவல் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43-ரன்கள் சேர்ப்பு
2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது.