கிரிக்கெட்

18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றது இலங்கை கிரிக்கெட் அணி + "||" + 3rd ODI: Asalanka, Theekshana star in low-scorer as Sri Lanka beat South Africa to clinch series

18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றது இலங்கை கிரிக்கெட் அணி

18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றது இலங்கை கிரிக்கெட் அணி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது.
கொழும்பு,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.  தொடர் 1-1 என்ற சமனில் இருந்த நிலையில், தொடர் யாருக்கும் என்பதை தீர்மானிக்கு 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கொழும்புவில் நேற்று நடைபெற்றது.  இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 209 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் துவக்கிய தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 30 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த தென் ஆப்பிரிக்க அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் வென்றது.

சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, சுமார்  18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்
இலங்கையில் அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இறக்குமதியில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை பந்தாடியது தென்ஆப்பிரிக்கா
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
3. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்
இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
5. மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல் மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது.