கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோஸ் பட்லர், ஜாக் லீச் சேர்ப்பு


கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோஸ் பட்லர், ஜாக் லீச் சேர்ப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 2:11 AM GMT (Updated: 2021-09-08T07:41:33+05:30)

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோஸ் பட்லர், ஜாக் லீச் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மான்செஸ்டர், 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மான்செஸ்டரில் தொடங்குகிறது. தொடரில் 1-2 என்று பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் 4-வது டெஸ்டில் விடுவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது மனைவிக்கு சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அழைக்கப்பட்டு இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் சிறுசிறு காயங்களால் அவதிப்பட்ட போதிலும் அணியில் நீடிக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி வருமாறு:- ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஹசீப் ஹமீத், லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், கிரேக் ஓவர்டான், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.


Next Story