20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: வங்காள தேச அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா
ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.
வங்காளதேச அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் தொடரை வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அடிப்படையில் 15 வீரர்களைக் கொண்ட அணியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்காளதேச அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ரூபல் ஹுசைன் இடம் பெறவில்லை. அமினுல் இஸ்லாம் காத்திருப்பு வீரராக வைக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரூபல் ஹுசைன் இடம் பெற்ற நிலையிலும் 20 ஓவர் தொடருக்கு அவரைத் தேர்வு செய்யவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சவுமியா சர்க்கார் மோசமாக விளையாடினார். இருப்பினும் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ரூபல், முஸ்டாக் ஹுசேன், தஜுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ரூபலுடன் சேர்ந்து சுழற்பந்து வீச்சாளர் அமினுலும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இடம் பெறாத முகமது மிதும் சேர்க்கப்படவில்லை.
வங்காளதேச அணி விவரம்:
மெகமத்துல்லா (கேப்டன்), சாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹ்மான், சவுமியா சர்க்கார், லிட்டர் குமார் தாஸ், ஆபிப் ஹுசேன், முகமது நமிம், நுருல் ஹசன் சோஹன், சமிம் ஹுசேன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, முகமது சயிப்புதீன், சோரிபுல் இஸ்லாம், மெஹதி ஹசன், நசும் அகமது.
காத்திருப்பு வீரர்கள்: ரூபல் ஹுசைன், அமினுல் இஸ்லாம்.
Related Tags :
Next Story