கிரிக்கெட்

இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் - ரசிகர்கள் உற்சாகம் + "||" + Dhoni appointed as advisor to Indian team - Fans excited

இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்

இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்
20 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புதுடெல்லி,

16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்  17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விபரத்தை வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்தது.  

2007 ஆம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் டோனி.  

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக விளங்கினாலும், வெற்றி கேப்டனாகவில்லை. அவரது தலைமையில் இந்திய அணி இதுவரையில் ஐஐசி கோப்பை எதையும் வெல்லவில்லை.

இந்நிலையில் நிதானம்.. வெற்றிகளை வசப்படுத்துவதில் சிறப்பான வியூகம்.. இக்கட்டத்தான தருணத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவரான தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி நியமனம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,  உயர்மட்ட ஆலோசனையில் தோனியின் பெயரை பரிந்துரை செய்ததும், அனைவரும் ஒரே பதிலாக சம்மதத்தை தெரிவித்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  சமூக வலைதளங்களில் வாத்தி கம்மிங்... இசையுடன் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சியில் பேசும் வசணத்தை ஒப்பிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.  தோனியின் வருகையை... இந்திய அணி, உலக கோப்பையை வென்றது போன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வகை கொரோனா : இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்
தென் ஆப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
2. இந்திய அணி தற்போது யதார்த்தமாக இருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி..!
நாம் நமது கால்களை தரையில் வைத்து சற்று யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
3. ஒட்டுமொத்த அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்: ரோகித், டிராவிட் பேட்டி..!
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
4. இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி: கேன் வில்லியம்சன் விலகல்...!
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.
5. இந்திய அணிக்கு இது கடினமான நேரம்: சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணிக்கு இது கடினமான நேரம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்