கிரிக்கெட்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை + "||" + American batsman hits 6 sixes in one over in ODIs

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை.
ஓமன்,

ஓமனில் நேற்று நடந்த பப்புவா நியூ கயானாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய அமெரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஜஸ்கரன் மல்கோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் காடி டோகா பந்து வீச்சில் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர், ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 31 வயதான ஜஸ்கரன் மல்கோத்ரா இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. வரலாறு படைத்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.‌
2. 4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை
நாட்டின் கல்வி அமைச்சகத்தின் இந்திய தரவரிசை பட்டியலில் 4வது ஆண்டாக சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் 2வது இடம் பெற்றுள்ளது.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
4. பாராஒலிம்பிக்கில் தொடரும் இந்தியாவின் பதக்கவேட்டை: மனிஷ் நார்வால், பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை
பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் மனிஷ் நார்வால், பிரமோத் பகத் ஆகியோர் நேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 17 பதக்கம் வென்று வீறுநடை போடுகிறது.
5. டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.