கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவிப்பு + "||" + West Indies Cricket Team Announcement for the 20 Over World Cup

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அறிவிப்பு
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் சுனில் நரின், ஜாசன் ஹோல்டர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆச்சரியம் அளிக்கும் வகையில் 36 வயது வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடைசியாக 2015-ம் ஆண்டில் அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். மாற்று வீரர்களாக ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், ஷெல்டன் காட்ரெல், டேரன் பிராவோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


பொல்லார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி வருமாறு:-

பொல்லார்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், பாபியன் ஆலன், வெய்ன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே பிளட்செர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மயர், இவின் லீவிஸ், ஒபெட் மெக்காய், ரவி ராம்பால், ஆந்த்ரே ரஸ்செல், சிம்மன்ஸ், ஒஷானே தாமஸ், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

தொடர்புடைய செய்திகள்

1. முக்கியமான உலக விருதுகள்
முக்கியமான உலக விருதுகள்.
2. விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
3. உலக ஒலிம்பிக் தினம்
ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது.
4. உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி அணி 2-வது வெற்றி
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.