18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து அணி


18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து அணி
x
தினத்தந்தி 11 Sep 2021 10:38 PM GMT (Updated: 11 Sep 2021 10:38 PM GMT)

வங்காளதேச தொடரை முடித்தக் கொண்டு டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தானுக்கு சென்றது.

18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் கால்பதித்துள்ள நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.17, 19, 21) மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் (செப்.25, 26, 29, அக்.1, 3) விளையாடுகிறது. இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் குண்டு துளைக்காத பஸ்சில் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்ததும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். பாகிஸ்தான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் லாதம் தெரிவித்தார். நியூசிலாந்து அணியினருடன் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த சமரவீராவும் சென்றுள்ளார். 2009-ம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் சமரவீராவுக்கு இடது காலில் குண்டு காயம் ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது.

Next Story