மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்


மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Sep 2021 12:23 PM GMT (Updated: 12 Sep 2021 12:23 PM GMT)

அயர்லாந்தில் மைதானத்துக்குள் புகுந்த நாய் பந்தை கவ்விக் கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.


அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்நாட்டு மகளிர் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. பிரடி மற்றும் சிஎஸ்என்ஐ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இந்த போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாய் ஒன்று, பந்தை  கவ்விக்கொண்டு ஓடியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. 

ஆட்டத்தின் 9-வது ஓவரின் போது,  பார்வையாளர் மாடத்திலிருந்து ஒரு நாய் மைதானத்துக்குள் புகுந்தது. அதோடு, அந்த நாய் பந்தைக் கவ்விக் கொண்டு மீண்டும் பார்வையாளர் மாடத்தை நோக்கி ஓடியது. இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த வீராங்கனைகள், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். நாயிடம் இருந்து பந்தை வாங்கி, வீராங்கனை ஒருவர் நாயை உரிமையாளரிடம் வழங்கிவிட்டு திரும்பினார். நாய் பந்தை எடுத்து ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிலநிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. 

ரசிகர்களால் ஆட்டத்தில் இடையூறு ஏற்பட்ட செய்திகளை நாம் பலமுறை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், நாய் பந்தை கவ்விக்கொண்டு சென்றதால் ஆட்டம் தடை படுவது வினோதமாகவும் சிரிக்க வைக்கும்படியாகவும் அமைந்துள்ளது. 

Next Story