கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? + "||" + Rohit Sharma Set to Replace Virat Kohli as Limited Overs Captain After T20 World Cup: Report

கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா?

கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா?
20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
துபாய், 

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனது பேட்டிங்கில் கூடுதல் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் பிசிசிஐ வட்டார தகவல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில், டெஸ்ட் மற்றும் டி20  போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது  பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால்  ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்கலாம் என்று தெரிகிறது. 

விராட் கோலி தலைமையில் இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. சரிவில் இருந்து மீளுமா மும்பை?
ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
2. பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோற்றோம்: மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோற்றோம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
3. ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி
நடப்பு ஐபிஎல் 2021 க்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?
விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று கூறினார்
5. விராட் கோலியை சாடிய இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன்
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.