கிரிக்கெட்

அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம் + "||" + Arun Dhumal, BCCI Treasurer, Rubbishes Reports of Split Captaincy Between Rohit Sharma and Virat Kohli

அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்

அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
துபாய், 

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக  உள்ளதாக தகவல் வெளியானது. 

தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ்  ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது  பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள்,20 ஓவர்  அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி இந்திய கிரிக்கெட்  விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
2. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
3. போட்டியின் போது ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை
முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போதும் மைதானத்தில் யூடியூப் பிரபலம் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.
4. தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.’
5. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - ஸ்டுவர்ட் பின்னி
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து உள்ளார்.