கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார் + "||" + Will India vs Pakistan bilateral series resume? New PCB chief Ramiz Raja gives a direct answer

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற செய்தி ஏற்கெனவே பரவியது. இதனையடுத்து இசான் மணி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா ஆகிய இருவரும் அண்மையில் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை நியமிக்கும்படி பிரதமர் இம்ரான் கான் முன்மொழிந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக வாய்ப்புள்ள பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஜித் கானின் பெயரும் அடிபட்டிருந்தது. ஆனால் மஜித் கான், பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உறவினர் என்பதால்தான் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனது குடும்பத்துடன் எப்போதும் நல்ல உறவு வைத்திருக்கும் ரமீஸ் ராஜாவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக மஜித் கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜாவை நியமித்து பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா செயல்படுவார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி ஏற்றுகொண்ட ரமீஸ் ராஜா கூறியதாவது:-

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி மிகவும் கடினமானது, சவாலானது. இதை உணர்ந்துதான் பிரதமர் இம்ரான்கான் என்னிடம் பொறுப்பை வழங்கியுள்ளார். அதை நான் மனநிறைவுடன் செய்வேன் என நம்புகிறேன்.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே இப்போதைக்கு கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை. அரசியல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட்டை வீணாக்கிவிட்டது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. நிதானமாகத்தான் செயல்பட வேண்டும். முதலில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வலுப்படுத்தவே அதிகமாக கவனம் செலுத்துவேன்.
 
பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு டிஆர்எஸ் முறை இல்லை என்பது உறுதியானதுதான். அதனால் பல குழப்பங்கள் வருகின்றன. இந்த விவகாரம் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டமைப்புக்குத் தேவையான வசதிகளை அதிகப்படுத்திவிட்டுதான் பயிற்சியை மேம்படுத்த முடியும். முதலில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

அக்டோபர் 24-ம் தேதி 20 ஓவர்  உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் அணி வீரர்களைச் சந்தித்தேன். இந்த முறை நிச்சயம் இந்திய அணியை வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாக அமையும். இந்த முறை பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும் என அணி வீரர்களிடம் நானும் தெரிவித்துள்ளேன். 100 சதவீத உழைப்பை அணி வீரர்கள் அளிக்க வேண்டும், சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.

பிரச்சினைகளைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும், போட்டிகளை இழந்தாலும் அடுத்தடுத்து நகர வேண்டும். அணியில் உள்ள வீரர்கள் தங்களின் இடத்தைத் தக்கவைப்பது குறித்துக் கவலைப்படாதீர்கள், பயமின்றி விளையாடுங்கள் எனத் தெரிவித்துள்ளேன். இந்தப் பாதையில் செல்லும்போது வெற்றிகளைவிட அதிகமான தோல்விகளைச் சந்திப்போம் எனத் தெரிவித்தேன். ஆதலால் வீரர்கள் மனநிலையில் மாற்றம் தேவை. அச்சமில்லாமல் விளையாடுங்கள் எனக் கூறினேன்' இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து- இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
3. போட்டியின் போது ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை
முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போதும் மைதானத்தில் யூடியூப் பிரபலம் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.
4. தலீபான்கள் இந்த முறை நல்ல மனநிலையுடன் வந்துள்ளனர்- சாகித் அப்ரிடி நற்சான்று
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலீபான்கள் பல்வேறு உறுதி மொழிகளை அளித்தனர்.’
5. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - ஸ்டுவர்ட் பின்னி
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து உள்ளார்.