கிரிக்கெட்

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர் + "||" + IPL 2021: CSK's Faf du Plessis, Dwayne Bravo and Imran Tahir arrive in Dubai

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்
ஐபிஎல் போட்டியில் வரும் 19ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி எதிர்த்து நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.
துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 14-வது சீசனின் 2-வது பாதி போட்டி தொடங்குகிறது.  இதில்  பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்து சேர்ந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் லீக் டி20 தொடரில் டூப்பிளசிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர் ஆகிய மூவரும் இடம் பெற்று விளையாடினர். இதனால், துபாய் வந்து 2 நாட்கள் மட்டும் தனிமையில் இருந்து கொரோனா பரிசோதனைக்குப்பின் சென்னை அணி வீரர் இணைவார்கள்.

இதுகுறித்து சென்னை  அணி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ' மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 3 வீரர்கள் சென்னை அணி வீரர்கள் எக்ஸ்பிரஸில் இணைந்தனர்' எனத் தெரிவித்துள்ளது

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் பொலார்ட்  அபு தாபி வந்து சேர்ந்துள்ளார். சமீபத்தில் முடிந்த கரீபியன் ப்ரீமியர் 20 ஓவர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக பொலார்ட் இருந்தார்., அபு தாபியில் 2 நாட்கள் தனிமை மற்றும் பரிசோதனைக்குப்பின் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில்  இணைவார்.

மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் ' மிகப்பெரிய மனிதர் வந்துவிட்டார். எங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு குடைக்குள் வந்துவிட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி  எதிர்த்து நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
2. மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
3. ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி: 220 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.
5. ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் போட்டி ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.