கிரிக்கெட்

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா? + "||" + Virat Kohli Mooted Idea to Have Rohit Sharma Removed from ODI Vice-captaincy: Report

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?

துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க கோலி பரிந்துரைத்தாரா?
விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று கூறினார்

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார்.  இந்த நிலையில், ரோகித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என விராட் கோலி விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மாவுக்கு வயது அதிகமாகி விட்டதால் அந்த பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என  விராட் கோலி, அணித் தேர்வாளர்களிடம் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

ஒருநாள் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்குத் துணை கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டி20 அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோலி, தேர்வாளர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சரிவில் இருந்து மீளுமா மும்பை?
ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
2. பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோற்றோம்: மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோற்றோம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
3. ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி
நடப்பு ஐபிஎல் 2021 க்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா?
20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
5. விராட் கோலியை சாடிய இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன்
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.