பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்


பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்
x
தினத்தந்தி 18 Sep 2021 9:41 AM GMT (Updated: 18 Sep 2021 9:41 AM GMT)

கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்

லண்டன், 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்புகின்றனர். 

 நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்கேல் வான் தனது டுவிட்டர் பக்கத்தில்,  

“கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்திருப்பது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம். பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். விரைவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீர்க்கப்பட்டு பாகிஸ்தானில் விரைவில் கிரிக்கெட் விளையாடப்படும்” எனப்பதிவிட்டுள்ளார்.


Next Story