கிரிக்கெட்

பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..! + "||" + IPL 2021: Dhoni sounds warning bells, seen whacking huge sixes in training

பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..!

பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
துபாய்,

கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட  14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நாளை முதல் நடைபெற உள்ளன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.  இந்தப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் டோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், டோனி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிக்சருக்கு பறக்க விடும் காட்சிகள்  அடங்கியுள்ளன. சர்வசாதாரணமாக டோனி மெகா சிக்சர்களை பறக்க விடுவது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. டோனியின் ஆட்டம் எதிரணிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 36,339 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,028 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.