கிரிக்கெட்

ஐபிஎல் 2021- போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? + "||" + IPL 2021: Fans below 16 not allowed entry at Sharjah stadium, PCR COVID-19 report not needed in Dubai

ஐபிஎல் 2021- போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஐபிஎல் 2021-  போட்டியை நேரில் காண செல்லும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் ஊடுருவலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடங்குகிறது.
துபாய்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில், ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். 

சார்ஜா மைதானத்தைப் பொருத்தவரை, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும்.

இதேபோல் அபுதாபி மைதானத்திற்கு வரும் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் தேவையில்லை, ஆனால், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 12 வயதிற்கு உட்பட்டவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன் வரவேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் மேலும் 7,823- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
4. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் மேலும் 23 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.