கிரிக்கெட்

கிரிக்கெட் உலகை வியக்க வைக்கப்போகும் இரண்டு இந்திய வீரர்கள் - டேவிட் ஹஸ்சி சொல்லும் ஆரூடம் + "||" + Two Indian cricketers who will amaze the cricket world - David Hussey

கிரிக்கெட் உலகை வியக்க வைக்கப்போகும் இரண்டு இந்திய வீரர்கள் - டேவிட் ஹஸ்சி சொல்லும் ஆரூடம்

கிரிக்கெட் உலகை வியக்க வைக்கப்போகும் இரண்டு இந்திய வீரர்கள் - டேவிட் ஹஸ்சி சொல்லும் ஆரூடம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக பணியாற்றும் டேவிட் ஹஸ்சி (ஆஸ்திரேலியா) அளித்த ஒரு பேட்டியில்,
அபுதாபி, 

‘எங்கள் அணியில் இடம் பெற்றுள்ள சுப்மான் கில், நிதிஷ் ராணா இருவரும் தரமான வீரர்கள். அதிக திறமை படைத்தவர்கள். இந்த ஐ.பி.எல். சீசனில் மிகச்சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்போது கால்பதித்துவிட்டனர். தங்களது அபாரமான பேட்டிங்கால் கிரிக்கெட் உலகை வியக்க வைக்கப்போகிறார்கள். அவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை வீரர்களாக இருப்பார்கள். வெறும் ஒன்று, இரண்டு தொடர்களில் மட்டுமல்ல. அனேகமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் நீடிப்பார்கள்’ என்றார்.