கிரிக்கெட்

கொல்கத்தா அணி அபார பந்து வீச்சு: 92 ரன்களில் சுருண்டது பெங்களூரு + "||" + Russell, Chakravarthy help skittle RCB for 92

கொல்கத்தா அணி அபார பந்து வீச்சு: 92 ரன்களில் சுருண்டது பெங்களூரு

கொல்கத்தா அணி அபார பந்து வீச்சு:  92 ரன்களில் சுருண்டது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்றைய  ஐ.பி.எல். ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான  விராட் கோலி (5) , டி வில்லியர்ஸ் (0) மேக்ஸ்வெல் (10) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 

பின்வரிசை வீரர்களும் சரியாக ஆடாத காரணத்தினால், அந்த அணியால்  100 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. பெங்களூரு அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட தனது அணியை சரிவில் இருந்து மீட்க முடியவில்லை. 19 ஓவர்கள் தாக்குப்பிடித்த பெங்களூரு அணி 92 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் பெங்களூருவில் இன்று இரவு முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
2. பெங்களூரு: கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் - மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு
பெங்களூரு நகரில் கொரோனா பரவலை தடுக்க கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்க மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு தெரிவித்துள்ளது.
3. பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?
பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
4. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது
5. பெங்களூருவில் வரும் 9-ந் தேதி கர்நாடக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பெங்களூருவில் வரும் 9-ந் தேதி கர்நாடக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.