கிரிக்கெட்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு + "||" + England pull out of Pakistan tour

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து:  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லண்டன், 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நிமிடங்களே இருந்தநிலையில் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சித்து இருந்தனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரு  டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது
இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்ற இந்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 45,140 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 43,423 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.