கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் விலகல் + "||" + Harmanpreet to miss first ODI against Australia as India begins World Cup preparations

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து, இந்திய அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் விலகி உள்ளார்.
மெக்காய், 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காயில் இன்று நடக்கிறது. 

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இருந்து 20 ஓவர் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுர் கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலகி இருக்கிறார். அடுத்த போட்டிக்கு முன்பு அவர் உடல் தகுதியை எட்டி விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் எஞ்சிய வீராங்கனைகள் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நேற்று கூறுகையில், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடர் உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகுவதற்கு உதவிகரமாக இருக்கும். அணியின் கலவைக்கு தகுந்தபடி மிடில் வரிசையில் எந்த இடத்திலும் என்னால் விளையாட முடியும். எதிரணி எது? என்பதை பார்க்காமல் எங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்; இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தனது தூதரை அனுப்பிய பிரான்ஸ்: வெளியுறவு மந்திரி வரவேற்பு
மீண்டும் தனது தூதரை தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள பிரான்சுக்கு ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
3. இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது .
4. ஆஸ்திரேலியா டெஸ்டில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனை
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்.
5. இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவலில் இன்று தொடங்கியது .