கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று பலப்பரீட்சை + "||" + Will Rajasthan retaliate against Punjab? Multi-exam today

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று பலப்பரீட்சை

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் 32-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் (ஒரு சதம் உள்பட 277 ரன்கள்) நல்ல பார்மில் இருக்கிறார். ஷிவம் துபே (145 ரன்கள்), டேவிட் மில்லர் (102 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு கைகொடுத்து வருகிறார்கள்.

பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ் (14 விக்கெட்) கலக்கி வருகிறார். முஸ்தாபிஜூர் ரகுமான் (8 விக்கெட்), சேத்தன் சகாரியா (7 விக்கெட்) ஆகியோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், ஆன்ட்ரூ டை ஆகியோர் விலகியதை அடுத்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா), அதிரடி ஆட்டக்காரர் இவின் லீவிஸ் (வெஸ்ட் இண்டீஸ்), வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் அந்த அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

லோகேஷ் ராகுல்

பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (331 ரன்கள்), மயங்க் அகர்வால் (260 ரன்கள்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (178 ரன்கள்), ஷாருக்கான், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன் ஆகியோரும் அந்த அணியின் பேட்டிங்கில் வலு சேர்க்கும் வல்லமை படைத்தவர்கள். பந்து வீச்சில் முகமது ஷமி ( 8 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (7 விக்கெட்), முருகன் அஸ்வின், ரவிபிஷ்னோய் ஆகியோர் பயனுள்ள வகையில் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். டேவிட் மலான், ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் விலகியதை தொடர்ந்து பேட்ஸ்மேன் மார்க்ராம் (தென்ஆப்பிரிக்கா), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (இங்கிலாந்து), நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் புதிய வரவாக அணியினருடன் இணைந்துள்ளனர்.

பதிலடி கொடுக்குமா?

இரு அணிகளும் சில புதிய வீரர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே மும்பையில் சந்தித்த லீக்கில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் (119 ரன்கள்) அடித்த சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பஞ்சாப் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நேரடியாக நடைபெற உள்ளது.
2. இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3. மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை.
4. இன்று விண்வெளி பயணம் மேற்கொள்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.
5. தமிழகத்தில் இன்று புதிதாக 4,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையில் இன்று மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.