கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து விராட் கோலி பாராட்டு + "||" + Virat Kohli praises Varun Chakraborty bowling

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து விராட் கோலி பாராட்டு

வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து விராட் கோலி பாராட்டு
இந்திய அணிக்காக விளையாடும் போது சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி முக்கிய வீரராக இருப்பார் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், “ஒரு விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்து இருந்த நாங்கள் அடுத்த 20 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தோம். அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகும். பேட்டிங்கில் கொஞ்சம் நாங்கள் நிலைகுலைந்து விட்டோம். 

இது எங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இது 2-வது கட்ட ஐ.பி.எல். தொடக்கத்திலேயே நடந்தது நல்லதாகும். இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த மாதிரியான ஆடுகளத்தில் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியது முக்கியமானது. இவ்வளவு சீக்கிரமாக பனியின் தாக்கம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக விளையாடும் போது தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணியின் மாற்று வீரர்களின் திறமையை வலுப்படுத்த இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை இளம் வீரர்கள் அனைவரும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இவர் போன்ற திறமையான வீரர் இந்திய அணிக்காக விரைவில் விளையாட இருப்பது நல்ல அறிகுறியாகும். எங்கள் அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த சரிவில் இருந்து நாங்கள் வலுவாக மீண்டு வந்து அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம்” என்று கோலி தெரிவித்தார்.