கிரிக்கெட்

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் + "||" + Sanju Samson fined Rs 12 lakh for taking too long to bowl

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சஞ்சு சாம்சனுக்கு குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான நடத்தை விதிமுறையின் கீழ் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம்,

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 185 எடுத்தது. 

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ராஜஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு  குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான நடத்தை விதிமுறையின் கீழ் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.