கிரிக்கெட்

இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு + "||" + IPL 2021: Natarajan tests COVID-19 positive, SRH-DC game on

இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய்,

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. 

இந்த நிலையில்,  ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. 

இந்த சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐதராபாத் அணியின் எஞ்சிய வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தலீபான்கள் தடை
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
3. கொல்கத்தா அணி அபார பந்து வீச்சு: 92 ரன்களில் சுருண்டது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.