கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார் + "||" + Former West Indies cricketer accused of violating anti corruption rules

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார்

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார்
ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ். 40 வயதான இவர் 2012, 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். சாமுவேல்ஸ் 2019-ம் ஆண்டு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்று விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். அது தொடர்பாக விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் குற்றச்சாட்டை தற்போது பதிவு செய்துள்ளது. 

இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவமதிப்பு தேடித் தரும் நோக்கில் விருந்தோம்பலின் போது வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுப்பொருள், பணம் அல்லது இதர ஆதாயங்கள் பெற்றதை ஐ.சி.சி.க்கு தகவல் தெரிவிக்க தவறிய புகாரும் அடங்கும். 14 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாமுவேல்ஸ் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி.
2. கொரோனா பாதிப்பு: ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. பொல்லார்டு அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.
4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: 158 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 158 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.