பெண்கள் கிரிக்கெட்: தொடக்க வீராங்கனைகள் நாளை சிறப்பாக செயல்படுவார்கள் - பயிற்சியாளர் நம்பிக்கை


பெண்கள் கிரிக்கெட்: தொடக்க வீராங்கனைகள் நாளை சிறப்பாக செயல்படுவார்கள் - பயிற்சியாளர் நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2021 8:12 PM GMT (Updated: 23 Sep 2021 8:12 PM GMT)

பெண்கள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனைகள் நாளை சிறப்பாக செயல்படுவார்கள் என அணியின் பயிற்சியாளர் ஷிவ் சுந்தர் தாஸ் தெரிவித்துள்ளார்.

மெக்காய்,

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மெக்காயில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா (8 ரன்), ஸ்மிர்தி மந்தனா (16 ரன்) சொதப்பிய நிலையில் கேப்டன் மிதாலிராஜ் (63 ரன், 107 பந்து, 3 பவுண்டரி) அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினார். 

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

இந்த நிலையில் அணியின் முன்னேற்றம் குறித்து, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஷிவ் சுந்தர் தாஸ் கூறுகையில், நாளைய ஆட்டத்தில் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிர்தி மந்தனா சிறப்பாக செயல்பட்டு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் இடைப்பட்ட ஓவர்களில் சராசரி ரன் ரேட் 5 ஆகவும், கடைசி ஓவர்களில் சராசரி ரன் ரேட் 6 ஆகவும் இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அணியில் உள்ள இளம் வீராங்கனைகள் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளதாகவும், இனி வரும் ஆட்டங்களில் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story