நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து


நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து
x
தினத்தந்தி 23 Sep 2021 9:06 PM GMT (Updated: 23 Sep 2021 9:06 PM GMT)

ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

அபுதாபி,

கொரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக ஐதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரும், அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி அன்றைய தினம் ஆட்டம் நடைபெற்றது.

நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் கூறுகையில், நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள அணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நடராஜனால் விளையாட முடியாமல் போனது வருத்தம் தான் என்றாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். மேலும் டெல்லி அணியில் சில உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், இது போன்ற அம்சங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவை என்று தெரிவித்தார்.

Next Story